எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே 'ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா' நாடாளுமன்றத்தில் நாளை (டிச.17) தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதா இன்று தாக்கல் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், மசோதாவின் நகல் எம்பிக்கள் மத்தியில் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிச.20 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.