நிர்மலா சீதாராமனின் செய்கை சரியில்லை என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் நேருவை விமர்சித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மல்லிகார்ஜுன கார்கே, "நான் முனிசிபாலிட்டி பள்ளியில் படித்தவன். நிர்மலா சீதாராமனோ ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவரது ஆங்கிலம், ஹிந்தி புலமை நன்றாக இருக்கலாம், ஒரு “பொருளாதார நிபுணராக" இருக்கலாம். ஆனால், அவரது செயல்கள் நிச்சயமாக நன்றாக இல்லை" என பதிலடி கொடுத்துள்ளார்.