மாடுகள் முட்டித் தள்ளியதில் மூதாட்டி பலி (வீடியோ)

56பார்த்தது
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் மாடுகள் முட்டி மூதாட்டி உயிரிழந்தார். குர்தீப் கவுர் (65) என்ற மூதாட்டி வீட்டில் இருந்து ஊன்றுகோல் உதவியுடன் வெளியே நடந்து வந்தார். அப்போது அங்கு சில பசுக்கள் வந்தன. உடனே மிரண்ட பசுக்கள் குர்தீப் கவுரை தாக்கின. பசுக்கள் மூதாட்டியை கொம்புகளால் கொடூரமாக முட்டிக் கீழே தள்ளி மிதித்தன. இதில் பலத்த காயமடைந்த குர்தீப் கவுர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி