தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்கபுரம் பகுதியில் விவசாயிகள் அதிக அளவு பருத்தி, கடலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்பொழுது இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் வெண்டை சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் சொட்டுநீர் பாசனத்தில் வெண்டைக்காயை உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் வெண்டைக்காய் அண்டை மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.30-40 வரை விற்கப்படுகிறது.