குழந்தைகள் பள்ளி முடிந்த பின்பு மாலை நேரத்திலும் கூடுதல் வகுப்பு, படிப்பு எனப் பெற்றோர்கள் அவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. இதை மாற்ற வேண்டும். குழந்தைகளிடம் அதிக உடல் உழைப்பைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டியது அவசியம். தற்போது பல குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சனை இருக்கிறது. இதைப் பற்றி கவனக்குறைவாக இருந்துவிடாமல் வயதுக்கு ஏற்ற உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது, இல்லையெனில் நீரிழிவு நோய் ஏற்படும்.