மூக்கில் அடைப்பு ஏற்பட்டவர்கள் ஆவி பிடிப்பது வழக்கம். அதில் சிறிது கல் உப்பு, மஞ்சள் தூள், நொச்சி இலைகள், சிறிதளவு கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து போர்வை எதுவும் போர்த்தாமல் அப்படியே மூக்கில் நுழையும்படி ஆவி பிடிக்கலாம். இதில் இருக்கும் நொச்சி இலைகள், மஞ்சள் தூள், கற்பூரம் ஆகியவற்றிற்கு சளியை கரைக்கும் தன்மை உள்ளது. 2 நாட்கள் இது போல் ஆவி பிடித்தால் மூக்கடைப்பு காணாமல் போய்விடும். நெஞ்சில் கட்டிய சளியும் கரைந்து விடும்.