மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், "கல்லூரி பட்டமளிப்பு விழாக்களில் அணியும் கருப்பு அங்கி மற்றும் தொப்பி, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்க காலத்தை நினைவூட்டுகிறது. இந்த நடைமுறை ஐரோப்பாவில் இருந்து வந்தவை. இனி அதற்கு பதிலாக ஒவ்வொரு கல்வி நிறுவனமும், அமைந்துள்ள மாநிலத்தின் உள்ளூர் மரபுகள், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய பட்டமளிப்பு ஆடைகளை வடிவமைப்பு செய்து பயன்படுத்த வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.