வெள்ளி, திங்கள் தேர்தல் வேண்டாம் - தமிழிசை கோரிக்கை

85பார்த்தது
திங்கள் மற்றும் வெள்ளி போன்ற தினங்களில் தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்தால் சனி, ஞாயிறுடன் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள் எனவே வார இறுதி நாட்கள் மற்றும் முதல் நாட்களில் வைக்காமல் நடுவில் தேர்தலை நடத்த வேண்டும்”என்றார். நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி