சிங்காநல்லூர் - Singanallur

கோவையில் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில்

கோவையில் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில்

கோவை தடாகம் ரோடு வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு இரவு, பகல் பாராமல் இளைஞர்கள் வந்து சென்றனர். இதனால் சந்தேகமடைந்த பக்கத்து குடியிருப்பு வாசிகள் சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அதில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார் விசாரித்ததில், சில மாதங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் உட்பட 3 பேர் கணவன் - மனைவி என கூறி வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர். பின்னர் சில இளம்பெண்களை வரவழைத்து அங்கு விபசாரம் நடத்தியதும் தெரியவந்தது. இது குறித்து சாயிபாபா காலனி போலீசார் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்(23), விக்ரம் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా