திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை

53பார்த்தது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு தங்கக் கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடப்பது வழக்கம். அதன்படி நேற்று (நவ 15) இரவு தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி பவுர்ணமி கருடசேவை நடந்தது. உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்புடைய செய்தி