குருத்தோலை பவனி

71பார்த்தது
நீலகிரி மாவட்டம்
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை கொண்டாட படுவதையொட்டி குருத்தோலை பவனி உதகையில் இன்று உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு குரு தோலை ஞாயிறு ஆராதனை நடைபெற்றது.


கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை வருகிற 20ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தய வாரம் குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் குருத்தோலை பவனி உதகையில் இன்று நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு இறப்பதற்கு சில நாள்களுக்கு முன் ஜெர்சலம் நகரின் வீதிகள் வழியாக அவரை கழுதை மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வழி நெடுகிலும் நின்ற மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி ஓசனா பாடல்கள் பாடினார்கள்.

இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் இன்று உதகையில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவர்கள் கைகளில் தென்னை குருத்தோலைகள் ஏந்தியபடி வீதிகள் வழியாக ஓசனா பாடல்கள் பாடி பவனியாக வந்தனர். பின்னர் ஆலயங்களில் நடைபெற்ற ஆராதனையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி