பறவைகளை உண்டி-வில் வைத்து அடித்து கொள்ளும் கும்பல் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
உதகை மெயின் பஜார் பகுதியில் பறவைகளை உண்டிவில் வைத்து அடித்து கொன்று தூக்கிச் செல்லும் கும்பலின் சிசிடிவி காட்சி.
நீலகிரி மாவட்டம் உதகை மெயின் பஜார் குடியிருப்பு பகுதியில் பறவைகளை உண்டிவில் வைத்து அடித்துக்கொண்டு தூக்கி செல்லும் கும்பல்
இவர்களால் பறவைகளுக்கு மட்டுமல்ல அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது எனவும்
குடியிருப்பு பகுதியில் உண்டிலில் வைத்து பறவைகளைகுறி வைத்து அடிக்கும் போது அருகில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் சேதம் அடைவதாகவும் இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் உள்ளது என குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட துறையினர் இந்த நபர்களை பிடித்து துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.