நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சித் தலைவர்

82பார்த்தது
பாலகொலா ஊராட்சி, தங்காடு
கிராமத்தில் 25 பயனாளிகளுக்கு ரூ. 54. 58 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு.

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த தங்காடு கிராமத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டார்

மேலும் இதில் 25 பயனாளிகளுக்கு ரூபாய் 54. 58 லட்சம் மதிப்பீட்டில் ஆன பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தூய்மை பாரத இயக்கம் ஜல்ஜீவன் இயக்கம் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் கலைஞர் கனவு இல்லம் என கூட்டுப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது

மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு உறுதி மொழியையும் ஏற்றுக்கொண்டனர்

அதனைத் தொடர்ந்துதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி