அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

81பார்த்தது
நீலகிரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி சோதனை சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் இபாஸ் அமலுக்கு வந்துள்ளது இதனால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பதிவு செய்த பின்பு நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

நாளொன்றுக்கு 6000 வாகனங்கள் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்கள் நீலகிரிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல் நாளான இன்று நீலகிரி கேரளா எல்லையில் உள்ள நாடு காணி சோதனை சாவடியில் ஏராளமான வாகனங்கள் குவிந்தன.

சுமார் சோதனை சாவடியில் இருந்து கேரள மாநிலம் செல்லக்கூடிய சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இ-பாஸ் பதிவு செய்து வருபவர்கள் சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதால் சோதனை சாவடிகளில் காலதாமதம் ஏற்படுகிறது இதனால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி