கன்று குட்டியை வேட்டையாடி புலி

52பார்த்தது
நீலகிரி மாட்டம் மாயார் கிராமத்தில் கன்று குட்டியை புலி வேட்டையாடி வனப்பகுதிக்குள் இழுத்துச் செல்லும் பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளிமண்டல வனப் பகுதியில் அமைந்துள்ள மாயார் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் கன்றுக்குட்டி மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி வேட்டையாடி கொன்றது.


இந்த நிலையில் கிராம பகுதியில் பகல் நேரத்தில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி