தண்ணீர் தட்டுப்பாடு; பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

562பார்த்தது
சீசன் நடந்து வரும் நிலையில் உதகையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா நகரமான உதகையில் கோடை சீசன் மற்றும் தற்போது நடக்கும் இரண்டாம் சீசனில் லட்சகணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள சுற்றுலாத்தலங்களுக்கு வருகை தந்து தங்கும் விடுதிகள் தங்கி செல்வர், இவர்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யவும், உள்ளுர் மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கவும் பார்சன்ஸ்வேலி, மார்லி மந்து, டைகர் ஹில், கோரிசோலா, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்ட பெட்டா ஆகிய அணைகளின் நீர் இருப்பு மிக முக்கியமானது.

வட கிழக்கு மற்றும் தென் மேற்கு பருவ மழைப் பொய்த்துப் போனதால் அணையில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்து காணப்படுகிறது. எனவே மே மாதம் நடை பெறும் கோடை சீசனை சமாளிப்பது நகராட்சி நிர்வாகத்திற்கு சவால் நிறைந்தப் பணியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி