தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்

83பார்த்தது
தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் சித்திரை தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் 15 நாளான இன்று(ஏப்.20) தேரோட்டம் நடைபெற்றது. தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளது. தேரின் மொத்த எடை 40 டன் ஆகும். தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சாவூருக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி