நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்டோன்மென்ட் பகுதியில் தூய்மை இந்தியா பசுமை இந்தியா நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
கன்டோன்மென்ட் வாரியம் சார்பாக செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை தூய்மை இந்தியா பசுமை இந்தியா நிகழ்ச்சி 14 நாட்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக கன்டோன்மென்ட் படகு இல்லம் பகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா, ராமச்சந்திரன். துவக்கி வைத்தார் அப்போது அப்பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தார் துடப்பத்தை எடுத்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார் மேலும் தூய்மை பணியாளர்கள் முன்பு உரையாற்றினார் அப்போது நீலகிரி மாவட்டத்தில் டாக்ஸி ஓட்டுநர்கள் முதல் வியாபாரிகள் வரை அனைவரும் சுற்றுலாவை நம்பி தான் இருக்கிறார்கள் என்றும் மேலும் சுற்றுலா துறையை மேம்படுத்துவோம் என்றும் சுற்றுலாவில் பல வகைகள் உண்டு அதில் மருத்துவ சுற்றுலா ஆன்மீக சுற்றுலா விவசாய சுற்றுலா போன்ற 12 வகை சுற்றுலாக்கள் உண்டு என உரையாற்றினார் நிகழ்ச்சியில் ஜேசிஐ அமைப்பு நிர்வாகிகள் மற்றும் கன்டோன்மென்ட் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.