உதகையில் ஆயுத பூஜையை முன்னிட்டு  கரும்பு விலை உயர்வு

79பார்த்தது
தமிழகம் முழுவதும் நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தி வரும் பொருட்கள், வாகனங்கள் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்வது வழக்கம். அதன் பின்பு சிறப்பு பூஜை செய்து வாகனங்களுக்கு மாலை அணிவிக்கின்றனர்.

இதில் வாழைக்கன்று, பூக்கள், கரும்பு, மா இலை முக்கியமாக இடம்பெறும். நீலகிரி மாவட்டத்துக்கு ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு தேவையான கரும்பு, வாழைக்கன்றுகள் போன்றவை சமவெளி பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

உதகை நகராட்சி மார்க்கெட் சந்தைக்கு கரும்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து லாரிகளில் கரும்புகள் கொண்டு வரப்பட்டு மொத்த வியாபாரிகள் மார்க்கெட்டில் வரிசையாக இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.

உதகை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சில்லரை வியாபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து கரும்புகளை வாங்கி செல்கின்றனர்

மேலும் அலங்காரப் பொருட்கள் மற்றும் வாகனத்திற்கு அணியக்கூடிய திருஷ்டி கயிறுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு  கரும்பு விலை உயர்ந்து உள்ளது. ஒரு கரும்பு ரூ. 40 முதல் ரூ. 50 வரைக்கும், ஒரு கட்டு கரும்பு  ரூ. 850க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி