நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் மாணவர்களுக்கான நான் முதல்வன் உயர்வுக்கு படி கலந்துரையாடல் நிகழ்ச்சி குன்னூர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது. குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு கல்வி தான் மிக முக்கியமானது என்றும் அரசு பல்வேறு வழிகளில் கல்வி கற்க உதவி செய்து வருகிறது.
அதில் புதுமைப்பெண் திட்டம், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை கொடுத்து மேம்படுத்தி வருகின்றது. அதை எந்தளவுக்கு பயன்படுத்துகிறீர்களோ அந்த அளவு பயன் பெறுவீர்கள் எனத் தெரிவித்தார்.