கால்பந்து போட்டியில் ஹில்ஸ் கிங் அணி வெற்றி

1042பார்த்தது
நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், ஊட்டி எச். ஏ. டி. பி. மைதானம் மற்றும் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடை பெற்ற பி டிவிஷன் பிரிவு முதல் போட்டியில் நேதாஜி அணியும், ஹில்ஸ் கிங் அணியும் மோதியது.

இதில் சிறப்பாக விளையாடிய ஹில்ஸ் கிங் அணி 3-1 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி ஊட்டி சிட்டி எப். சி. அணிக்கும், நைஸ் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் இடையே நடந்தது. போட்டியில் 2 அணிகளும் சமபலத்துடன் விளையாடி தலா ஒரு கோல் போட்டன. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. 3-வது போட்டியில் நீலகிரி யங் ஸ்டார் அணியும், நீலகிரி பைசன் அணியும் விளையாடின.

இந்த போட்டி தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்தி விளையாடிய நீலகிரி புல்சன் அணி 5 கோல்கள் போட்டது. நீலகிரி யங் ஸ்டார் அணியால் கோல் எதுவும் திரும்ப போட முடியவில்லை. இதன் மூலம் 5-0 என்ற கோல்கள் கணக்கில் நீலகிரி பைசன் அணி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி