குன்னூர் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்த காணப்பட்ட நிலையில் இன்று உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்து வந்தது
இந்நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது
மேலும் திடீர் கனமழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.