வெள்ளைப் பூண்டு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை.
மலை மாவட்டமான நீலகிரி விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மாவட்டமாக விளங்குகிறது. இங்கு மலை காய்கறிகளாக கேரட் பீட்ரூட் உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பீன்ஸ் மற்றும் வெள்ளைப் பூண்டு ஆகியவை பயிரிடப்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் வெள்ளைப்பூண்டு கிலோ 600 ரூபாய் வரை விற்பனையை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஆனால் தற்பொழுது அறுபது ரூபாய்க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.
வெள்ளைப் பூண்டு விதைகள் ஒரு கிலோவிற்கு 550 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி வந்ததாகவும் தற்பொழுது ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாவதால் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு சரியாகி விடுகிறது என புலம்புகின்றனர் விவசாயிகள்.
அதிகமான பரப்பளவில் வெள்ளை பூண்டு விளைவிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது விலை குறைவாக உள்ளது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.