கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளது
இந்த நிலையில் வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி சமவெளிப் பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குஞ்சப்பனை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பலா மரங்களில் உள்ள பலாக் காய்களை உண்பதற்காக குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வந்து முகாமிட்டுள்ளன.
இதனால் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மேல்தட்ட பள்ளம் அருகே அந்த ஒற்றை காட்டு யானை சாலையின் குறுக்கே நின்று வாகனங்களை வழிமறித்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. யானையை கண்ட வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர்.
மேலும் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த காட்டு யானை அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்றதால் நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள் அதன் பின் வானங்களில் இயக்கினர் மேலும் இந்த சாலையில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருப்பதால்
வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வன பகுதிக்கு விரட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.