கேரட் அறுவடை பணிக்கு சென்ற பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து

2961பார்த்தது
கோத்தகிரி அருகே தீனட்டி பகுதியில் அதிகளவில் மலை காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அறுவடை செய்யும் காய்கறிகளை பிக்கப் வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு செல்ல மூட்டைகள் மீது அமர்ந்து செல்ல தடை உள்ளது‌‌. இருந்த போதிலும் தொழிலாளர்களை கேரட் மூட்டைகள் மேல் அமர வைத்து சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கேரட் மூட்டைகள் ஏற்றி சென்ற பிக்கப் வாகனம் கேரட் மூட்டைகளை சுத்திகரிப்பு நிலையத்தில் இறக்கி வைத்துவிட்டு, பின்னர் ஆட்களை பிக்கப் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது தீனட்டி பகுதியில் கட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவே பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கேரட் அறுவடை பணிக்கு சென்ற பதினைந்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். உடனடியாக அவர்களை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கோத்தகிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி