மாணவர்களுக்காக வகுப்பறையில் நீச்சல் குளம் செய்த ஆசிரியர் (வீடியோ)

56பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் நகரில் உள்ள மஹாசௌனாபூர் அரசுப் பள்ளியில் உள்ள வகுப்பறையை, ஆசிரியர் ஒருவர் நீச்சல் குளமாக மாற்றியுள்ளார். இந்திய மக்களை கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலில் சோர்வாக குழந்தைகள் பள்ளிக்கு வருவதை கண்ட ஆசிரியர் வைபவ் செயற்கை நீச்சல் குளத்தை அமைத்தார். குளமாக மாறிய வகுப்பறையில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடினர். அவரின் இந்த செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி