கல்லூரி மாணவிகள் மீதான தாக்குதல் (வீடியோ)

62பார்த்தது
உ.பி., மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. சில குண்டர்கள் கல்லூரி பெண்களை சாலையில் கிண்டல் செய்தனர். அநாகரீகமான வார்த்தைகளால் அவர்களை சீண்டினர். பைக்கை நிறுத்தி சாலையில் சென்ற பெண்களை வழிமறித்த மர்ம நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி