சோலையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இயற்கை முகாம்

1064பார்த்தது
சோலையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இயற்கை முகாம்
கோத்தகிரி லாங்வுட் சோலையில் இன்று நடைபெற்ற சிறப்பு இயற்கை முகாம் மற்றும் கருத்தரங்கிற்கு கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ தலைமை வகித்தார். வனவர் விவேகானந்தன் அனைவரையும் வரவேற்றார்.

லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் செயலர் கே. ஜே. ராஜு அவர்கள் சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசுகையில், காடுகள் மனித குலத்தின் தொட்டில் எனவும் மனித நாகரீகம் தழைத்தது காடுகளில் இருந்து தான். அனைத்து வகையான உணவுப் பொருட்களும், 196 வகையான மருந்து பொருட்களும் காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் அமைப்பு சோலை காடுகள் மற்றும் புல்வெளிகள் ஆகும். இந்த சோலை காடுகள் மழை நீரின் 75% மண்ணில் தேக்கி வைத்து நீர் ஆதாரங்களாக வெளிப்படுத்துகிறது. புல்வெளிகள் காற்றில் இருந்து நீரை உறிஞ்சி, சேமித்து வைத்து நீரை கொடுக்கிறது.

நீலகிரி மாவட்டம் தென்னிந்தியாவின் நீர் தொட்டி என்று அழைக்கபடுகிறது. காவிரி ஆற்றில் ஓடும் நீரில் ஆறில் ஒரு பங்கு நீலகிரியில் தான் உற்பத்தி ஆகிறது. மேலும் காடுகள் அனைத்து விலங்கு பறவைகள் பூச்சிகள் என இலட்சக்கணக்கான உயிரினங்களுக்கு வாழிடமாக அமைந்துள்ளது.

ஒரு புலி வாழ்ந்தால் 50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள காடு வாழும். அந்தக் காட்டில் அனைத்து உயிரினங்களோடு ஆறுகள், நதிகளும் உற்பத்தியாகும் என்று தெரிவித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி