தொற்றுநோயை தடுக்கும் தடுப்பானாக செயல்படும் நெல்லி மிட்டாய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு நார்ச்சத்து அவசியம், நெல்லி மிட்டாய் நார்ச்சத்து நிறைந்தது என்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தருகிறது. இதை தினமும் 2 அல்லது 3 எண்ணிக்கையில் சாப்பிடலாம். மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என இதை தயாரித்து பதப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.