டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக, பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். மோடியுடன் அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்களும் இன்று(ஜூன் 7) மாலை ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளனர். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஜனாதிபதியிடம் வழங்கப்படவுள்ளது.