திருச்செங்கோடு: கோயில் குடமுழுக்கு முளைப்பாலிகை ஊா்வலம்

70பார்த்தது
திருச்செங்கோடு: கோயில் குடமுழுக்கு முளைப்பாலிகை ஊா்வலம்
திருச்செங்கோடு சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்களின் தீா்த்தக்குடம், முளைப்பாலிகை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு நகரம் பாலு தெரு சின்ன மாரியம்மன் கோயிலில் மூன்றாவது குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை முகூா்த்தகால் நடும் விழா நடைபெற்றது. இதையடுத்து கிராம சாந்தி பூஜைகள் நடத்தப்பட்டு, விநாயகா் பூஜை, மகா சங்கல்பம், அம்பாளின் அனுமதி பெறும் பூஜை, பிரவேச பலி, வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தக் குடம், முளைப்பாலிகை எடுத்துக் கொண்டு நான்கு ரத வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனா்.

இதனைத் தொடா்ந்து முதல் கால, இரண்டாம் கால மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்று, கோபுரக் கலசம் வைக்கப்பட்டு, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது. நான்காம் காலம், ஐந்தாம் கால யாக பூஜைகளுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆறாம் கால யாக பூஜைகளும், 7 மணி முதல் 8 மணி வரை கோபுர குடமுழுக்கு, ஸ்ரீ விநாயகா், பரிவாரங்களுக்கான குடமுழுக்கு, மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஆகியவை நடக்க உள்ளன.

தொடர்புடைய செய்தி