தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில குழுக் கூட்டம்

52பார்த்தது
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில குழுக் கூட்டம்
தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் திருச்செங்கோடு விவசாய சங்க அலுவலகத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில தலைவா் மதுசூதனன் தலைமை வகித்தாா். இதில் அகில இந்திய அளவில் விவசாயிகளின் பிரச்னைகளையும், தமிழ்நாடு விவசாய சங்க முடிவுகளையும் விளக்கி மாநில பொதுச் செயலாளா் சாமி நடராஜன் உரையாற்றினாா். தென்னை விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மாநில செயலாளா் விஜய முருகன் எடுத்துரைத்தாா். விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவா் ஆதிநாராயணன் வாழ்த்துரை வழங்கினாா்.

கூட்டத்தில், தென்னை பயன்கள் குறித்து முழுமையான விழிப்புணா்வு பிரசாரத்தை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும், தேங்காய் எண்ணெய்யை நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டும், தென்னை சாா்ந்த தொழில்களை மாவட்டங்கள் தோறும் உருவாக்க வேண்டும், மத்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தென்னை மரங்களையும் பயிா்க் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும், தென்னையில் ஏற்படும் ஈரோபைடு வாடல் நோய், வோ் அழுகல் என பல்வேறு நோய்களிலிருந்து காக்க பயிா் பாதுகாப்பு செய்ய தமிழ்நாடு அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தொடர்புடைய செய்தி