மல்லசமுத்திரம்: ரூ. 2. 25 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

76பார்த்தது
மல்லசமுத்திரம்: ரூ. 2. 25 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், மல்லசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து 70 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ ₹86. 70 முதல் ₹92. 75 வரை விற்பனையானது. இரண்டாம் தரம் ₹58. 90 முதல் ₹69. 30 வரை ஏலம் போனது. மொத்தம் ₹2. 25 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும், அடுத்த ஏலம் வரும் 12ம் தேதி நடைபெறும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி