சேந்தமங்கலம் - Senthamangalam

சேந்தமங்கலத்தில் ஏப். 19-இல் ஜல்லிக்கட்டுப் போட்டி

சேந்தமங்கலத்தில் ஏப். 19-இல் ஜல்லிக்கட்டுப் போட்டி

நாமக்கல் மாவட்டத்தில், ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையை தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், எருமப்பட்டி, சாலப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. சேந்தமங்கலத்தில் வழக்கமாக மாசிமக தோ்த் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். நிகழாண்டில் போட்டிக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அதற்கான அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து, சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி-சாலையூா் செல்லும் சாலையில் உள்ள மைதானத்தில் வரும் சனிக்கிழமை காலை 8 மணியளவில் போட்டி நடைபெறுகிறது. பத்து ஏக்கா் பரப்பில் இதற்கான மைதானம் தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 600 காளைகளும், 400 மாடுபிடி வீரா்களும் பங்கேற்க உள்ளனா். நாமக்கல் மட்டுமின்றி திருச்சி, சேலம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்கின்றன. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా