நாமக்கல்: மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து, துாறல் மழை பெய்யத் தொடங்கியது. இரவு, 9: 00 மணிக்கு இடி, மின்னலுடன் பெய்த மழை, 2 மணி நேரம் நீடித்தது. மீண்டும், நேற்று காலை, 5: 30 மணிக்கு மெட்டாலா, மங்களபுரம், மூலப்பள்ளிப்பட்டி, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால், மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே இருந்த, 50 ஆண்டு வாகை மரம் வேருடன், ஆத்துார் பிரதான சாலையில் சாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால், எந்த வாகனங்களும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.