காலாவதியான குளிா்பானத்தை குடித்த இளைஞா் உயிரிழப்பு: "

66பார்த்தது
கொல்லிமலையில் காலாவதியான குளிா்பானத்தை குடித்த இளைஞா் உயிரிழந்தாா். மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சித்தூா்நாடு ஊராட்சி படக்கிராய் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி குமாா் (42). இவரது மனைவி மீனாட்சி (36). இவா்களுக்கு 10 வயதுடைய மகன் உள்ளாா். நரியன்காடு அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தபோது காலாவதியான குளிா்பானத்தை எடுத்துச் சென்று அவுரிகாடு கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி (23) என்பவருடன் சோ்ந்து அருந்தியுள்ளாா். இதையடுத்து சில நிமிஷத்தில் பழனிசாமி மயங்கி விழுந்தாா். அங்கிருந்தோா் அவரை மீட்டு செங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் அவா் உயிரிழந்தாா். மயக்கமடைந்த மாணவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி