ரசாயன உரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

54பார்த்தது
ரசாயன உரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் சார்பில் எருமப்பட்டி வட்டாரம் வேளாண் விரிவாக்க மையத்தில் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைப்பு பற்றி பயிற்சி நடைபெற்றது.

இதில் எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பா. செல்வி தலைமை வகித்து வேளாண்மை துறையின் மத்திய மாநில அரசின் திட்டங்கள் மற்றும் மாநிலங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் வாசு தோட்டக்கலைத் துறையில் உள்ள மானிய திட்டங்களை பற்றி விளக்கம் அளித்தார். மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர். அப்பாவு (மண்ணியல் துறை) ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்தும் முறையின் தொழில்நுட்பம் மற்றும் மண், நீர் பரிசோதனையின் முக்கியத்துவம், இயற்கை இடுபொருட்கள் மூலம் மண்ணை மேம்படுத்துவது முறை. மண்ணிற்கும் நீருக்கும் ஏற்ப பயிர் சாகுபடி வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு செ. நந்தகுமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் திருமதி. திரேக பிரியா மற்றும் திருமதி காவியா ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி