கொல்லிமலையில் இடைநின்ற மாணவா்கள் பள்ளிகளில் சோ்ப்பு

54பார்த்தது
கொல்லிமலையில் இடைநின்ற மாணவா்கள் பள்ளிகளில் சோ்ப்பு
சேந்தமங்கலம், கொல்லிமலை ஒன்றியத்தில், பள்ளி இடைநிறுத்திய மாணவ மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகளை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். கொல்லிமலை ஒன்றியத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஐந்து குழுக்களாகப் பிரிந்து சென்ற கல்வித் துறை அதிகாரிகள், ஒவ்வொரு பள்ளியிலும் இடைநிறுத்திய மாணவ மாணவிகள் விவரங்களைக் கேட்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து சேர்த்தனர். பள்ளி மாணவர்கள் மீது ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி அறிவுறுத்தினார். 

சேந்தமங்கலம் ஒன்றியத்தில், 58 பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் வே. கற்பகம், மு. ஜோதி, பச்சமுத்து, சமக்கிரா திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் பாஸ்கர், பள்ளித் துணை ஆய்வாளர் கை. பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கீதா, சிந்துஜா, நந்தினி, சுமதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழுவானது, இடைநிறுத்திய மாணவ மாணவிகளின் வீட்டிற்குப் புதன்கிழமை சென்று மீண்டும் படிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். அவர்களைப் பள்ளிகளில் சேர்க்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி