வினாத்தாள் கசிந்ததாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, "வினாத்தாள் கசிந்ததாக வதந்திகள் பரவி வருகிறது. பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை, மாணவர்களே இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், சிபிஎஸ்இ விதிகளின்படியும், இந்திய தண்டனை சட்டத்தின்படியும் அவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்துள்ளார்.