சேந்தமங்கலம் அடுத்த, முத்துகாபட்டி அருகே தனியார் சேம்பரில், விழுப்புரம் மாவட்டம், குன்னத்துாரை சேர்ந்த வெங்கடேஷ், 26, பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் சிலம்பரசன். இருவரும், பழையபாளையம் ஏரியில், மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, பழையபாளையத்தை சேர்ந்த ரஞ்ஜித், 24, முத்துகாபட்டி மேதரம்மா தேவியை சேர்ந்த அருண்குமார், 28, ஆகிய இருவரும், வெங்கடேஷிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். வெங்கடேஷ் கொடுத்த புகார்படி, ரஞ்ஜித், அருண்குமாரை சேந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர்.