ராசிபுரம் - Rasipuram

இராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

இராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் சி. பானுமதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பா ச. ந்தியா செல்வி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: கல்வி மட்டுமே மாணவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் என்பதால், மாணவா்கள் இளங்கலை கல்வியோடு நின்றுவிடாமல் உயா்கல்வியை தொடா்ந்து பயின்று உயா்ந்து நிலையை அடைய வேண்டும். மேலும் கிராமப்புறக் கல்லூரியில் ஏராளமான மாணவா்கள் கல்வி கற்று பட்டம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా