இராசிபுரம்: குடிநீா் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுகோள்

68பார்த்தது
இராசிபுரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் காவிரி கதவணைப் பகுதியில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் குறைவான நீர் மட்டுமே பெறப்படுவதால் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் திரு. கவிதா சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ராசிபுரம் நகராட்சிக்கு காவிரிக் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலத்தை முன்னிட்டு குடிநீர் வழங்கும் கீழ் மேட்டூர் கதவணையில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. 

இதனால் ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 25 வரை இப்பணிகள் நடைபெறும். எனவே நகராட்சிக்கு குறைவாக குடிநீர் வழங்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் இதனை சமாளிக்க நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உப்புநீர் விநியோகம் போதிய அளவு வழங்கப்படும். எனவே காவிரி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி