பொன்குறிச்சி பகுதிகளில் திடீர் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

67பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகின்ற நிலையில், நாமக்கல் மாவட்டம் பொன்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பிள்ளாநல்லூர், குருசாமிபாளையம், குருக்கபுரம், கூனவேலம்பட்டி, ஆயிபாளையம், கல்லுபாளையம் ஆகிய பகுதிகளில் இன்று சுமார் 2 மணி அளவில் மழை பெய்தது.  இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி