நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள பொன்குறிச்சி ஊராட்சியில் நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இக்கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.