நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம், புகழ்பெற்ற புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தேர் இழுத்தனர். மேலும் தொடர்ந்து இன்று 09. 04. 2025 ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தரையில் உருண்டு தளம் போட்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.