நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணியர் திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப். 11) காலை 6 மணி அளவில் சிவசுப்ரமணிய சுவாமிக்கும் தெய்வானைக்கும், வள்ளி சமேத சுவாமிகளுக்கு மேளதாளத்துடன் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு மிக்க இப்பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.