தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பிய, தமிழ்நாடு பல்கலைக்கழக (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து இன்று தீர்ப்பு வழங்கியது. மேலும் ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களில் வேந்தராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிள்ளாநல்லூர் பேரூராட்சியில், பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் முன்னிலையில் திமுக சார்பாக பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். மேலும் ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.