இராசிபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

69பார்த்தது
ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ சாா்பில் சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம், ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் முன்பு தொடங்கிய பேரணியில் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ தலைவா் மணிமேகலை தமிழரசன் தலைமை வகித்தாா்.

பேரணியை ராசிபுரம் டிஎஸ்பி எம். விஜயகுமாா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். பேரணியில் ராசிபுரம் ரோட்டரி சங்க நிா்வாகி இ. என். சுரேந்திரன், ஜெசிஐ சசிரேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், கைப்பேசியில் பேசியபடி செல்லக் கூடாது, அதிவேக பயணம் கூடாது, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட விழிப்புணா்வுகள் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி