இராசிபுரம்: திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

60பார்த்தது
இராசிபுரம்: திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் வசித்து வருபவர் அழகப்பன் (65). இவர் தீயணைப்புத் துறையில் மாவட்ட அலுவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி சுப்புலட்சுமி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் 19 அன்று வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தங்களது மகளை பார்க்க இருவரும் சென்றனர். மறுநாள் வேலைக்காரப் பெண் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீடு முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்ததாம். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டிருந்ததாம். 

வீட்டின் உரிமையாளர் அழகப்பன் புகாரின் பேரில், ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் (31), மதுரை மாவட்டம், காளவாசல் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (33) என்பதும், ராசிபுரம் நகரில் அழகப்பன் வீட்டில் திருடியது அவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் பதுக்கி வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில் 24 வழக்குகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி