டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்புடன் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வரை 47 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள் தேவை. அதனை தாண்டி 47 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதனால் மூலம் ஆட்சியை பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 22 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், 1 தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.